பிரதான செய்திகள் விளையாட்டு

மும்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வென்றுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு ஆரம்பமான 31 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ரோயல் சலஞ்சர்றை வென்றுள்ளது.  மும்பை வான்கடே மைதானத்தில்; நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை அணி களத்தடுப்பினை தெரிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இதனையடுத்து 172 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ஓட்டங்களை எடுத்து வெற்றியீட்டியுள்ளது. மும்பை அணியின் லசித் மலிங்கா ஆட்டநாயகன் விருதினை பெற்றுள்ளார்.

இந்தப் போட்டியின் மூலம் மும்பை அணி 5-வது வெற்றியை பெற்றுள்ள அதேவேளை பெங்களூரு அணி பெற்ற 7-வது தோல்வியாகும்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.