Home இலங்கை முகமாலை வெடிப்பு சம்பவத்தில் இரு பெண்களுக்கு கடும் காயம்…

முகமாலை வெடிப்பு சம்பவத்தில் இரு பெண்களுக்கு கடும் காயம்…

by admin

யாழ்ப்பாணம் முகமாலையில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இளம் தாயார் உள்பட பெண்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண்களே இந்த வெடிவிபத்தில் படுகாயமடைந்தனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்று காலை முகமாலை பகுதியில் இராணுவத்தினர் ஆக்கிரமித்திருக்கும் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏதிர்பாராத விதமாக புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி ஒன்று வெடித்து சிதறியுள்ளது. இதில் பரந்தனை சேர்ந்த 6 வயதுப் பிள்ளையின் தாயாரான 25 வயதுடைய குனேந்திரன் ரேணுகா  என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். இவரிற்கு அருகில் நின்ற இன்னொரு பெண் உத்தியோகத்தர் மேகலதா என்பவரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். சம்பவத்தை அடுத்து இருவரும் ஆரம்ப முதலுதவிகளிற்கு பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More