உலகம் பிரதான செய்திகள்

ஏமனில், அமெரிக்க ராணுவத்தினரின் பங்களிப்பை நிறுத்தும் தீர்மானத்தை, ட்ரம்ப் நிராகரித்தார்…

ஏமனில் உள்நாட்டுப் போரில் அமெரிக்க ராணுவத்தினரின் பங்களிப்பை நிறுத்துவதற்காக அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்த தீர்மானத்தை  நிராகரித்துள்ளார்.

இத்தீர்மானம் தமது அரசியலமைப்பைச் சேர்ந்த அதிகாரிகளை பலவீனப்படுத்துவதற்கான தேவையற்ற மற்றும் ஆபத்தான முயற்சியாகும் எனத் தெரிவித்துள்ள ட்ரம்ப இது அமெரிக்க குடிமக்கள் மற்றும் நாட்டுக்காக சேவை புரிபவர்களைப் பாதிக்கும் செயல் எனவும் தெரிவித்துள்ளார்.

ஏமன் அரசுடன் இணைந்து சவூதி அரேபியா நடத்தும் தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை முன்னரே கண்டித்திருந்த நிலையில் ஏமனிலிருந்து அமெரிக்கா தனது படைகளை திரும்பப் பெற வேண்டும் என நீண்ட நாட்களாகவே உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இதனைத் தொடர்ந்தே அமெரிக்க பாராளுமன்ற அவையில் குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இரு பாராhளுமன்ற உறுப்பினர்களும் ஏமனில் போரை நிறுத்த வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்திருந்தனர்.

தாங்கள் உலகின் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளவர்களுக்கு உதவியுள்ளோம் எனவும் ஏமன் போரில் அமெரிக்கப் படைகள் பங்கேற்று இருப்பது அவமானகரமானது எனவும் தெரிவித்துள்ள அவர்கள் ஈராக், சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகளை வெளியே கொண்டுவர ஜனாதிபதி ட்ரம்ப் ஆர்வமாக இருக்கிறார். ஆனால் ஏமனிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறுவது குறித்து அவர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னர் தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது இந்த தீர்மானத்தை ஜனாதிபதி ட்ரம்ப் நிராகரித்துள்ளார். ட்ரம்ப்பின் இந்த முடிவு அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களை சினமடையச் செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏமன் உள்நாட்டுப்போரில் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.