மாங்குளம் காவற்துறைப்  பிரிவுக்குட்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் முறிகண்டி செல்வபுரம் பகுதியில் இன்று அதிகாலை பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்தப்  பாரிய விபத்தில் ,  ஒருவர் மாத்திரமே சிறு காயத்திற்குள்ளாகியுள்ளார்.

பதுளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே  இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதிக வேகம் காரணமாக குறித்த பேருந்து  பாதையைவிட்டு விலகி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வருகின்றது.

பாதையை விட்டு விலகிய பேருந்து ஏ9 வீதியில் அமைந்துள்ள கனகாம்பிகை குளத்திற்குள் குடைசாய்ந்துள்ளது. மிக மோசமானமுறையில் குறித்த பேருந்து செலுத்தப்பட்டுள்ளமை தெரியவருகின்றது.

விபத்தில் சிறுகாயத்துக்குள்ளாகிய நிலையில் ஒருவர்  கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம்  காவற்துறையினர்  மேற்கொண்டு வருகின்றனர்.