Home இலங்கை அனைத்துத் தமிழரையும் அணைத்துக் கொண்டோடும், அழகியபிரவாகம் ஈழத்தின் தமிழிசை…

அனைத்துத் தமிழரையும் அணைத்துக் கொண்டோடும், அழகியபிரவாகம் ஈழத்தின் தமிழிசை…

by admin

பேராசிரியர்சி.மௌனகுரு..


ஈழத்தின் தமிழிசை (ஆற்றுகை நிகழ்வு) இலங்கை வேந்தன் கலைக் கல்லூரி மண்டபத்தில் 21.04.2019 அன்று இடம்பெறுகிறது ஈழத்துக் கவிஞர்களாலும் இசைப் பாடகர்களாலும் இயற்றப்பட்ட பாடல்கள் தெரிவு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் விசேட பயிற்சியளிக்கப்பட்டு, தவமைந்தன் றொபேர்ட்டினலும் அவரது ஒன்பது மாணவர்களளாலும் 100 பாடல்களை அன்றை யதினம் இசைக்க இருப்பதாக அறிந்துபெரும கிழ்வடைகிறேன்.

25இற்கும் மேற்பட்ட ஈழத்துக் கவிஞர்களின் பாடல்கள் இந்நிகழ்விற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும். தானவர்ணம், பதவர்ணம், கீர்த்தனை, சௌக்ககாலக்கிருதி, பதம், துதிப்பாடல்கள், தில்லானா, காவடிச்சிந்து, திருப்புகழ் போன்ற இசைப்பாடல் வகைகள் இந்நிகழ்வில் இடம்பெற உள்ளதாகவும் அறிகிறேன்.

இவற்றுள் தொண்ணூறுக்கும் அதிகமான பாடல்கள் புதிதாக தவமைந்தன் றொபேட்டினால் இசைவடிவம் கொடுக்கப்பட்டுப் பயிற்சியளிக்கப்பட்டுள்ளன இது ஓர் பெருமுயற்சி. சாதனை எனினும் பொருந்தும் இவ்வாண்டில் இது ஓர் முக்கிய நிகழ்ழ்சியாக எனக்குத் தெரிகிறது ஈழத் தமிழருக்கான ஒருதனிமரபு இலக்கியம் நாடகம் இசை ஓவியம் . கூத்து நடனம் வாழ்க்கைமுறை என அனைத்திலும் உண்டு.

இப்பண்பாட்டுத் தனித்துவத்தை ஆறுமுலநாவலர், தொடக்கம் சுவாமி விபுலானந்தர் ஊடாக பேராசிரியர்களான கணபதிப்பிள்ளை கைலாசபதி வித்தியானந்தன் சிவத்தம்பி மற்றும் தளையசிங்கம் ஏ,ஜேகனகரத்தினா ஊடாக இன்று இசைவாணர் தவமைந்தன் ரொபேர்ட்வரைஅ னைத்து அறிஞர்களும் கலைஞர்களும் அழுத்திக் கூறிவந்துள்ளனர்

தமிழகப்பண்பாட்டின் தொப்புழ்க் கொடியுடன் பிணைக்கப்பட்டிருக்கும் நாம் அப்பெருமரபின் வாரிசு எனக்கர்வம் கொள்ளும் அதேவேளை தொப்புழ்க்கொடியிலிருந்து பிரிந்தமையினால் நாமும் நமக்கோர் நலியாககலையுடையோம் என்ற சுயகௌரவமும் செருக்கும் கொண்டுள்ளோம். இவ்வகையில் நாமும் நமக்கோர் இசைப்பாரம்பரியம் கொண்டுள்ளோம். இதற்காக தம்வாழ்வை அர்ப்பணித்த இசைவாணர்களைக் கொண்டது எமதுதேசம் ஈழத்தில் கர்னாடக கீர்த்தனைகள் பதங்கள் இசைப்பாடல்கள் படியோர் அதிகம் எமது செந்நெறீ இசைமரபில் 2000க்கும் அதிகமான கீர்த்தனைகள் உள்ளனஎன அறிகிறோம்.

ஈழத்து மெல்லிசை என ஒன்றுஉருவாகி இன்று அது பலபரிமாணங்களையும் பெற்றுள்ளது பந்நூற்றூக்கணக்கான மெல்லிசைப், பாடல்கல் எம்மிடமுள. பல்லாயிரக் கணக்கான மக்கள் இசைப்பாடல்கள் ஈங்குண்டு இறைவன் ,இயற்கைகாதல், சமுகம், விலையாட்டு வேடிக்கை தொழில் சடங்கு கோபம் தாபம் என அதன் உட்பொருள் விரியும். அப்பாடல்கள் பலசொற்சுவையும் பொருட்சுவையும் மிக்கவை. அப்பாடல்களில் சிலவற்றைத் தெரிந்தெடுத்து இசையமைத்து நமது செந்நெறி இசைமரபை ஈழத்தின் தமிழிசை என அரங்கேற்றுகின்றார் தவமைந்தன்.

இதற்கு இசையில் ஆழமான புலமைமாத்திரமன்றி அசாத்திய துணிவும் தேவை. இவை இரண்டும் ஒருங்கே அமைந்தவர் றொபேர்ட் மிகுந்த கற்பனை வளமுள்ள கலைஞன் அவர் வாய்ப்பாட்டிலும் வாத்தியம் இசைப்பதிலும் வல்லவர். ஈழத்துச் செந்நெறித் தமிழிசையின் அரங்கேற்றம் நிகழ்த்தும் தவமைந்தனையும் அவரது அணிசேர் இசைகலைஞர்களையு ம்வாழ்த்தும் அதேவேளை. ஈழத்தின் செந்நெறி சாராத செழுமையான மக்களிசை மரபொன்றும் உண்டு என்பதை இங்கு கூற விரும்புகின்றோம் இசைவல்லுனரான தவமைந்தனுக்கு இதுதெரியாத தொன்றல்ல. முதல்பாகமாக இதனைச் செய்யும் இவர் அடுத்த பாகமாக அதனையும் செய்து அதன்பின் இரண்டையும் இணைத்து மூன்றாம் பாகமாக ஓரு முழுஈழத்தமிழிசை ஒன்றை எமக்குஅளிப்பார் என எதிர்பர்ப்போம்.

அவரால் அது முடியும் தமிழிச என்பது ஒருபெரும்பேராறு அது காலத்துக்கும் சூழலுக்கும் ஏற்ப தன்னைத் தகவமைத்துப் பிரவகித்தபடி ஓடி க்கொண்டிருக்கிறது
தமிழிசை என்பது அனைத்தையும் இணைத்த அனைத்துத் தமிழர்களையும் பிணைத்துக் கொண்டோடும் அழகிய பிரவாகம் அந்தப் பிரவாகம் கரைபுரண்டோடி அனைவரையும் நனைக்கட்டும்.

இசையால் இணைவோம் இசையால் இணைவோமே
இசையால் இணைவோமே- தமிழ்
இசையால் இணைவோம் இசையால்இணைவோம்
இசையால் இணைவோமே

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More