பிரதான செய்திகள் விளையாட்டு

பஞ்சாப்பை டெல்லி 5 விக்கெட்டுக்களால் வென்றுள்ளது


12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 37 ஆவது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. நேற்றிரவு டெல்லியில் இடம்பெற்ற போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணித் தலைவர் ஸ்ரேயாஸ் அய்யர் களத்தடுப்பினை தெரிவு செய்த நிலையில் முதல்லி துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்களை எடுத்தது.

இதனையடுத்து 164 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 19.4. ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.போட்டியின் ஆட்டநாயகனாக டெல்லி அணித் தலைவர் ஸ்ரேயாஸ் அய்யர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.