உலகம் பிரதான செய்திகள்

வியட்நாமில் மோசமான ரசாயனம் சேமித்து வைத்திருந்த விமானத்தளத்தினை சுத்தம் செய்யும் அமெரிக்கா

 
வியட்நாமில் உள்ள விமானத்தளம் ஒன்றினை பல மில்லியன் டொலர்கள் மதிப்பில் செலவு செய்து சுத்தம் செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விமானத்தளத்தில்தான் அமெரிக்கா மோசமான ஓரஞ்ச் எனப்படும் ரசாயனத்தை சேமித்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வியட்நாம் போர் முடிந்து நான்கு தசாப்தங்களுக்கும் மேலாகியுள்ள நிலையில், இந்த பத்தாண்டு திட்டத்தை 183 மில்லியன் டொலர்கள் செலவில் அமெரிக்கா ஆரம்பித்துள்ளது.

வியட்நாமில் ஹோ சி மின் நகரத்திற்கு வெளியே உள்ள இந்த பியன் ஹோ விமான நிலையத்தில் உள்ள விமானத்தளம், அந்நாட்டிலேயே மிக மோசமான, நச்சுப் பொருட்களால் பாதிக்கப்பட்ட விமான நிலையமாகும்.
காடுகளை அழிக்கவும், அதனால் அங்கு மறைந்திருந்த எதிரிகளை கண்டுபிடிக்கவும், அமெரிக்கப்படைகள் இந்த ஓரஞ்ச் ரசாயனத்தை பயன்படுத்தியிருந்த நிலையில் இதனால் 1,50,000 குழந்தைகள் கடுமையான பிறப்பு குறைபாடுகளோடு பிறந்ததோடு பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டதாக வியட்நாம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.