இலங்கை பிரதான செய்திகள்

பிற்பகல் 2 மணிக்கு கட்சி தலைவர்கள் கூடுகிறார்கள்…


நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று பிற்பகல் விசேட கட்சி தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 2 மணிக்கு கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார். நாளை பாராளுமன்றத்தில் கலந்துரையாப்படவுள்ள விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளது. எதிர்வரும் மே மாதம் 7 ஆம் திகதியே பாராளுமன்றம் கூடவிருந்தது. எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையினை கருத்திற் கொண்டு நாளை பிற்பகல் 1 மணிக்கு பாராளுமன்றத்தை கூட்டவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். பிரதமரின் கோரிக்கை்கு அமையவே பாராளுமன்றம் நாளை கூடவுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.