ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் பல்வேறு இடங்களில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்து வந்த, 4 பெண்கள் உட்பட 7 பேர் கொண்ட கடத்தல் குழுவொன்றினை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காவல்துறையினருக்கு கிடைத்த தகவலினையடுத்து ஐதராபாத் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடுதல் மேற்கொண்ட போதே குறித்த குழு கைது செய்யப்பட்டுள்ளது.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஒரு மாத பெண் குழந்தை, மற்றும் இரண்டரை வயதுடைய 2 ஆண் குழந்தைகள் கடத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதுடன் கடத்தப்பட்ட குழந்தைகளை குழந்தைகள் இல்லா தம்பதிகளுக்கு 2.5 லட்சம் மற்றும் 3.10 லட்சம் ரூபாக்கு விற்றுள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து மீட்கப்பட்ட 3 குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட 7 பேரிடமும காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Anthira #children #kidnapping
Add Comment