இலங்கை பிரதான செய்திகள்

கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு யாழ் மாநகர சபையில் அஞ்சலி

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

 நாடெங்கிலும் உயிர்த்த ஞாயிறு தினத்தில்  இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு யாழ் மாநகர சபையில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் போது தேசியக் கொடி, மாகாண கொடி மற்றும் மாநகர சபை கொடி என்பன அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு மூன்று நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்தோடு மொழுகுவர்த்தி கையில் ஏந்தியவாறு நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் அஞ்சலி செலுத்தினர்

மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்ற இவ் அஞ்சலி நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்கள், அதிகாரிகள் , உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

 

#national flag, #handles #srilanka, #eastersundayLK

 

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.