இலங்கை பிரதான செய்திகள்

யாழ் நீதிமன்ற வளாகத்துக்குள் கைப்பை கொண்டு வர தடை

 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்குள் வரும் பொதுமக்கள் கைப்பை (Hand Bag) உள்ளிட்ட பொதிகளை எடுத்துவருவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று நீதிமன்றப்  காவல்துறை பிரிவு அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்தக்கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக  காவல்துறையினர் தெரிவித்தனர்.

நாட்டில் உதிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலையடுத்து நாடு முழுவதுமுள்ள அரச நிறுவனங்கள், வைத்தியசாலைகள் மற்றும் வங்கிகளில் பொதிகளை எடுத்துச் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த்து.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் நீதிமன்றவளாகத்துக்குள் இந்த நடைமுறையை காவல்துறையினர் பின்பற்றத் தவறியதால் இன்று வியாழக்கிழமை நீதிமன்ற வழக்குக்கு வருகை தந்த ஒருவர் தான் எடுத்து வந்த கைப்பையை நீதிமன்ற வாயிலின் உள்புறத்தில் வைத்துவிட்டு உள்ளே வந்துள்ளார்.

இதனால் நீதிமன்ற வளாகத்துக்கு குழப்பநிலை ஏற்பட்டது. எனினும் கைப்பையை எடுத்து வந்தவர் காவல்துறையினரிடம் தகுந்த காரணத்தைக் கூறியதால் அவரிடம் கைப்பை வழங்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தையடுத்தே யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்குள் கைப்பை உள்ளிட்ட பொதிகளை எடுத்துவர பொதுமக்கள்அனுமதிக்கப்படார் என்று நீதிமன்ற காவல்துறை பிரிவு அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள நீதிவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், தொழில் நியாயமன்றம், மேல் நீதிமன்றம் மற்றும் குடியியல் மேன்முறையீட்டு மேல்நீதிமன்றம் ஆகியவற்றின் நடவடிக்கைகளை சுமுகமாகமுன்னெடுக்க நீதிமன்றப்  காவல்துறையினர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மேல் நீதிமன்றம் இன்று அறிவுறுத்தல் வழங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

#jaffna, court  #eastersundaylk #handbag

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.