Home பிரதான செய்திகள் சென்னையை மும்பை 46 ஓட்டங்களினால் வென்றுள்ளது.

சென்னையை மும்பை 46 ஓட்டங்களினால் வென்றுள்ளது.

by admin


12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 44 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினை மும்பை இந்தியன்ஸ் அணி 46 ஓட்டங்களினால் வென்றுள்ளது. இரு அணிகளுக்குமிi;யேயபன போட்டி இன்றிரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பமான நிலையில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி முதலில் களத்தடுப்பை தெரி;வு செய்த நிலையில் முதலில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இதனையடுத்து 156 ஓட்டங்கள் என்னும் வெற்றிஇலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 17.4 ஓவர்களின் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 109 ஓட்டங்ளை மாத்திரம் பெற்று, 46 ஓட்டத்தினால் தோல்வியடைந்துள்ளது.

பந்து வீச்சில் மும்பை அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய மலிங்க 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

#IPL   #MumbaiIndians  #ChennaiSuperKings

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More