இலங்கை பிரதான செய்திகள்

கல்முனை – சவலக்கடை – சம்மாந்துறை பிரதேசங்களில் மறு அறிவித்தல்வரை ஊரடங்கு


கல்முனை – சவலக்கடை மற்றும் சம்மாந்துறை பிரதேசங்களுக்கு, மறு அறிவித்தல் வரையில் காவல்துறை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தில், பயங்கரவாதிகள் தங்கியிருப்பதாகக் கூறப்படும் வீடொன்றை, இராணுவத்தினர் மற்றும் காவல்துறை அதிரடிப்படையினர் சுற்றிவளைத்த போது, பயங்கரவாதிகளுக்கும் படையினருக்கும் இடையில் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

அதனையடுத்து, அங்கு மூன்று பாரிய வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் அங்கு, தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாமெனத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் மறு அறிவித்தல் வரையில் காவல்துறை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை நாட்டின் ஏனைய பகுதிகளில் இரவு 10 யிலிருந்து நாளை அதிகாலை 4மணிவரை காவல்துறை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

 

#curfew #kalmunai #suicideattack

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap