இலங்கை பிரதான செய்திகள்

கொம்பனிவீதி பள்ளிவாசல் வாள்கள் மீட்பு – கொழும்பு மாநகரசபை உறுப்பினர் கைது


கொழும்பு மாநகரசபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்  நூர்தீன் மொஹமட்   தாஜுதீன் காவல்துறையினரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொம்பனிவீதி பள்ளிவாசல் ஒன்றில் இருந்து 46 வாள்கள் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவந்த காவல்துறையினர் குறித்த சம்பவம் தொடர்பிலேயே இவ்வாறு கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் தாஜுதீனை கைதுசெய்துள்ளனர்.

அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் தாஜுதீனின்உறவினர் மற்றும் மௌலவி ஒருவரையும் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர் எனவுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்றையதினம் கொம்பனிவீதி பள்ளிவாசல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 46 வள்களும் இராணுவ சீருடையும் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

 #Slaveisland #mosque #arrested  #thajudeen

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap