Home இலங்கை முல்லைத்தீவின் இரண்டு கிராமங்கள் படையினரால் சுற்றிவளைப்பு!

முல்லைத்தீவின் இரண்டு கிராமங்கள் படையினரால் சுற்றிவளைப்பு!

by admin

முல்லைத்தீவு மாவட்டத்தின் இரண்டு கிராமங்கள் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதலுக்குட்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் நகர் பகுதி மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந் நிலையில் இன்று (27.04.19) அதிகாலை தொடக்கம் முல்லைத்தீவில் முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் கிராமங்களான முள்ளிவளை ஹிஜ்சிராபுரம் மற்றும் முல்லைத்தீவு உண்ணாப்புலவு வரையான பகுதிகளில் படையினர் மற்றும் காவற்துறையினர் குவிக்கப்பட்டு சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது வீட்டிலுள்ள உரிமையாளர்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டபோது புல்மோட்டையினை சேர்ந்த நபர் ஒருவர் ஹிஜ்சிராபுரத்தில் தங்கி இருந்த வேளை அவரை படையினர் கைதுசெய்துள்ளதுடன் அதே கிராமத்தில் மற்றும் ஒருவரையும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து முள்ளியவளை காவற்ததுறையினரிடம் ஒப்படைத்துள்ளார்கள் கைதுசெய்யப்பட்ட நபர்கள் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவற்துறை தரப்பு தெரிவித்துள்ளது. #Mullaitivu #srilanka #mullaitivuhijrahpuram # unaappulavu ##EasterSundayattack

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More