Home இலங்கை கழுத்தை நெறிக்கும் நுண் கடன்களால் வாழ்வை தொலைக்கும் பெண்கள் – மு.தமிழ்ச்செல்வன்

கழுத்தை நெறிக்கும் நுண் கடன்களால் வாழ்வை தொலைக்கும் பெண்கள் – மு.தமிழ்ச்செல்வன்

by admin

சிறு தொழில் செய்வதற்காக கடன் பெற்றேன் ஆனால் தொழில் முயற்சியில் தோல்வி கடனை கட்ட முடியவில்லை.இதனால் நான் பெரும்பாலும் வீட்டில் இருப்பது கிடையாது கடனை அறவிடும் வருகின்றவர்கள் வீட்டில் இருக்கின்ற எனது மகளுடன் அநாகரீகமான வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வதோடு, தவறாகவும் நடக்கவும் முற்படுகின்றனர். என்றால் நெடுங்கேணியை சேர்ந்த பெண்னெருவர்.

சம்பவம் இரண்டு – இறுதி யுத்தத்தில் கணவர் இறந்து விட்டார் இரண்டு பிள்ளைகள். எனக்கு வீட்டுத்திட்டம் கிடைத்தது ஐந்து இலட்சத்து ஐம்பதாயிரம் பெறுமதியானது அது வீட்டினை முழுமையாக கட்டிமுடிக்க போதாது எனவே வாரம் மற்றும் மாதம் தவணைப்பணம் கட்டுகின்ற முறையில் கடன் எடுத்து வீட்டு வேலையினை முடித்தேன். தற்போது கடன் கட்டுவதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது ஒழுங்காக கட்ட முடியவில்லை. ஆனால் கடனை அறவிட வருகின்றவர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியாதுள்ளது. மிகவும் கேவலமாக கதைக்கிறார்கள் எங்கையென்றாலும் போய் கடனை கட்டுமாறு கூறுகின்றார்கள். இதனை தாங்கிக்கொள்ள முடியாது இரண்டு தடவைகள் தற்கொலைக்கு முயற்சித்த போது எனது பிள்ளைகள் காரணமாக கைவிட்டுவிட்டேன். என்றார் முல்லைத்தீவை சேர்ந்த இளம் குடும்பத் தலைவி ஒருவர்.

சம்பவம் மூன்று – நாங்கள் குழுவாக சேர்ந்து கடன் எடுத்தனாங்கள் மாதத்தின் கடைசி புதன் கிழமை மூவரும் சேர்ந்து சென்று கடனை கட்டவேண்டும் ஒருவர் வராதுவிட்டாலும் மற்ற இரண்டு பேரின் பணத்தையும் பெற்றுக்கொள்ளமாட்டார்கள்.எங்கள் குழுவில் ஒருவர் கடனை ஒழுங்காக கட்டுவதில்லை இதனால் அவருடன் ஏற்பட்ட முரண்பாடுகள் இறுதியில் அவரின் கணவருக்கும் எனது கணவருக்கும் இடையே அடிதடியில் முடிந்தது பின்னர் பொலீஸ் மத்தியஸ்தர் சபை சென்று வந்திருக்கின்றோம். என்றார் கிளிநொச்சி கோணாவில் பிரதேசத்தை சேர்ந்த பெண்னொருவர்.

சம்வம் நான்கு – நான்கு நிறுவனங்களில் கடன் எடுத்தேன் 25 அயிரம் முதல் இரண்டு இலட்சம் வரை கிழமைக்கு ஒருக்கா இரண்டு கிழமைக்கு ஒருக்கா மாதத்திற்கு ஒருக்கா என கடன் கட்ட வேண்டும் கோழிவளர்ப்பு, ஆடு வளர்ப்புக்கு என வாங்கிய கடன்கள் ஆனால் அவை வெற்றியளிக்கவில்லை. கடன் கட்டுவதில் இப்பொழுது நெருக்கடி இந்த நிலையில் கடனை அறவிட வருகின்ற ஒரு நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் ஆரம்பத்தில் என்னுடன் அன்பாக பணிவுடன் பேசுவார் ஒரு சில தடவைகள் தான் தனது சம்பளத்தில் எனது கடன் தவணைப் பணத்தைக் கட்டுவதாகவும் தெரிவித்தார். அப்போது நான் நினைத்தேன் எனது நிலைமையினை கருதி இரக்கப்பட்டு நடந்துகொள்கின்றார் என்று ஆனால் என்னுடன் பாலியல் ரீதியாக எல்லை மீறி நடக்க முற்பட்ட போதே அவரின் நோக்கம் வெளியில் தெரிய ஆரம்பித்தது. என்றார் கிளிநொச்சி மேற்கு பிரதேசத்தை சேர்ந்த கணவனால்கைவிடப்பட்ட பெண்.

மேற்படி இந்த சம்பவங்கள் எதுவும் கற்பனையல்ல. நுண் கடன் தொடர்பான செயலமர்வு ஒன்றில் பெண்களால் தெரிவிக்கப்பட்ட தாங்கள் அனுபவித்த அல்லது தங்களின் கிராமங்களில் பெண்கள் அனுபவிக்கின்ற சம்பவங்கள் ஆகும்.

2009 நாட்டின் இனப்பிரச்சனை பற்றியும், அரசியல் தீர்வுப்பற்றியும் பேசும் அதே அளவுக்கு பேசப்படுகின்ற ஒரு விடயமாக நுண் கடன் விடயம் மாறியிருக்கிறது. கடன் என்பது முதலீட்டுக்கான ஒரு வழியே.இதன் மூலம் உற்பத்திகள்; அதிகரிக்கப்பட்டு வாழ்க்கைத் தரம் உயர வேண்டும். ஆனால் இந்த நுண் கடனால் இதுவரை வடக்கு கிழக்கில் 65 பேருக்கு மேல் தற்கொலை செய்துகொண்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படியாயின் இது மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் ஒரு கடன் பொறிமுறையா? என்பதுவே பிரதான கேள்வியாக உள்ளது.

உணவை காட்டி மிருகங்களை பொறிக்குள் சிக்கவைத்து வேட்டையாடுவது போன்றே நுண் கடன் திட்டமும் மக்களின் வறுமை தேவை என்பவற்றை பயன்படுத்தி அவர்களை இந்தப் பொறிக்குள் தள்ளிவிடுகின்றன சமூகத் தலைவர்கள் தொடர்ச்சியாக கவலை தெரிவித்து வருகின்றனர். மத்திய வங்கியின் மற்றும் நிதி அமைச்சின் கீழ் பதிவுசெய்யப்பட்ட புதிய புதிய நுண் கடன் நிறுவனங்கள் வடக்கு கிழக்கில் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றன. இவற்றின் வட்டி வீதங்களை கேட்டால் மயக்கம் வரும். இருந்தும் மக்கள் வேறு வழியின்றி தங்களின் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்கு இந்த நுண் கடன் பொறிக்குள் சிக்கிக்கொண்டு அதன் விளைவாக சொத்துக்களை விற்பனை செய்வது, தலைமறைவாக வாழ்வது, தற்கொலை செய்வது என வாழ்க்கை மாறுகிறது. குறிப்பாக இந்த நுண் கடன் பொறிக்குள் சிக்கி சின்னாபின்னமாக போகின்றவர்கள் பெண்களே. நுண்கடன் குடும்ப வாழ்க்கை முதல் சமூகம் வரை பல பிரச்சினைகளை தோற்றுவிக்கின்ற ஒரு காரணியாகவும் காணப்படுகிறது

அரசு நுண் கடனை இரத்துச் செய்கிறது, நுண் கடன் வட்டிகளை இரத்துச் செய்கிறது, வெள்ளத்தினால் பாதிக்கப்பட் பிரதேசங்களில் நுண் கடன் அறிவிடுவதற்கு சில மாதங்களுக்கு தடை, வரட்சியினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நுண் கடன் இரத்துச் செய்யப்படும் போன்ற அரசின் அறிவித்தல்கள் அவ்வவ்போது வெளிவருகின்ற போதும் அவை தங்களை போன்ற கிராமங்களை சேர்ந்த மக்களிடம் சென்றடையவில்லை என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சியை சேர்ந்த யசிதரன் இராஜேஸ்வரி இதுவரை ஆறு நுண் நிறுவனங்களில் நுண் கடன் பெற்றுள்ளார். மாதம் 22 ஆயிரம் ரூபா கடன் கட்ட வேண்டும்; கணவன் கூலித் தொழில் படிக்கின்ற மூன்று பிள்ளைகள் வீட்டுச் செலவு படிப்புச் செலவு என்பவற்றோடு கடனையும் கட்ட வேண்டும். மிகவும் கஸ்ரமான வாழ்க்கைதான். இவ்வாறு கடன் எடுத்துதான் காணி எடுத்தது மதல் காணிக்கு மண் நிரப்பி வேலி அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டோம். வங்கிகளில் கடன் எடுக்கச் சென்றால் இரண்டு அரச பிணை கேட்பார்கள் நிறைய கட்டுப்பாடுகள் எங்களை போன்ற ஏழைகளுக்கு எந்த அரச உத்தியோகத்தர் பிணைக்கு வருவார் எனவே எங்களுககு; ஏற்றவாறு நுண் கடன் நிறுவனங்களே வீடு தேடி வந்து கடன் வழங்குகின்றனர் என்றார். மேலும் அரசாங்கத்தின் அறிவித்தல் எம்மையும் வந்துசேரும் என மகிழ்ச்சியோடு காத்திருந்தோம் ஆனால் இதுவரை எவ்வித அறிவித்தலும் இல்லை என்றார்

அத்தோடு அம்மாவாசி தேவி என்பவர் கூறும் போது இதுவரை ஆறு நிறுவனங்களில் நுண் கடன் பெற்றிருக்கிறேன். ஒரு சிலவற்றை கட்டி முடித்துவிட்டேன் தற்போது மாதம் ஒன்றுக்கு 40 ஆயிரத்து ஐநூறு ரூபா வேண்டும் கடன் கட்ட. சில வேளைகளில் சமைப்பது கிடையாது அவர் கூலித் தொழில் மூன்று பிள்ளைகள் இரண்டு பேர் படிக்கின்றார்கள். காணிக்கும் மாடு மற்றும் கோழி வளர்ப்புக்கு செலவு செய்திருகின்றோம் என்றார்.

சந்திரசேகரன் சந்திரவதனி எனது வீடுதான் கிராமத்தில் கடன் சென்ரராக இருந்தது. ஆறு கடன்கள் எடுத்தனான் எனது பெயரிலும் தெரிந்தவர்களின் பெயர்களிலும் கடன் பெற்றேன். இப்போது சுயதொழிலும் செய்ய முடியாது போய்விட்டது. கடன் தொல்லைகள் வீட்டில் இருக்க முடியாது நிலைமை. ஆசை ஆசையாக கட்டிய வீட்டில் நிம்மதியாக வாழ முடியாது போய்விட்டது. தற்போது நாங்கள் குடும்பமாக சொந்த ஊரிலிருந்து வெளியேறி பிரிதொரு இடத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றோம். இந்த வீட்டை விற்பதற்கு தீர்மானித்துள்ளோம் அதுவும் இதுவரை சரிவரவில்லை எனறார். அவர் மேலும் குறிப்பிடுகையில் அரசாங்கம் வடக்கில் ஏழாயிரம் பெண்களுக்கு நுண் கடனை இரத்துச் செய்துள்ளது என்று அறிவித்தது அது இதுவரை பாதிக்கப்பட்ட எங்களுக்கு கிடைக்கவில்லை என்றார்

நுண் கடன்களால் பெண்கள் இவ்வாறு மிக மோசமான பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்து வரகின்றனர். நுண் கடன் தொடர்பில் அரசு போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது பலரது குற்றச்சாட்டுக்கள். சுமார் 24 வீததத்திற்கு மேல் வட்டியை பெறுகின்ற அளவுக்கு நுண் கடன்கள் பெண்களை இலக்கு வைத்து வழங்கப்படுகிறது.எனவே அரசு நுண் கடன் விடயம் தொடர்பில் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் அதுவே அனைவரின் கோரிக்கையாகவும் உள்ளது.

#loan #women #rent

விற்பனைக்குள்ள வீடு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More