பிரதான செய்திகள் விளையாட்டு

மும்பையை கொல்கத்தா 34 ஓட்டங்களினால் வென்றுள்ளது

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 47 ஆவது லீக் போட்டியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 34 ஓட்டங்களினால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்றுள்ளது . இரு அணிகளுக்குமிடையிலான போட்டி நேற்றிரவு கொல்கத்தாகவில் ஆரம்பமான நிலையில் நாணய சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்திருந்தது.

இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 232 ஓட்டங்களை எடுத்தது.இதனையடுத்து 233 என்ற வெற்றிஇலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து, 198 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 34 ஓட்டத்தினால் தோல்வியடைந்துள்ளது. இத் தொடரில் குறைந்த பந்துகளில் வேகமாக அரைசதம் கடந்த வீரர் என்ற பெருமையை இந்தப் போட்டியில் பாண்டியா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

#mumbaiIndians  #KolkataKnightRiders #ipl

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.