இலங்கை பிரதான செய்திகள்

தற்கொலைக் குண்டுதாரிகள் பயன்படுத்திய 18 வாகனங்களில் 6 மாத்திரமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன


கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டு உயிரிழந்த 8 தற்கொலைக் குண்டுதாரிகளும் 18 வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளதாக புலனாய்வு பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதில் 6 வான்கள், 9 மோட்டார் சைக்கிள்கள், 2 கார்கள், கப் ரக வாகனம் ஒன்று என்பன குறித்த தற்கொலைத்தாரிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த 18 வாகனங்களில் 6 வாகனங்கள் மாத்திரமே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதலை நடத்திய மொஹமட் முபாரக் மொஹமட் அஸாமின் பெயரில் 3 மோட்டார் சைக்கிள்களும் வானொன்றும் கப் ரக வாகனமும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்

 #vehicles #eastersundaylk #sucidebomb

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.