இலங்கை பிரதான செய்திகள்

மண்கும்பானில் இராணுவம் பயன்படுத்தும் பொருள்கள் மீட்பு

குளோபல் தமிழ் செய்தியாளர்

யாழ். .தீவகம் – மண்கும்பான் பள்ளிவாசலில் இன்று திங்கட்கிழமை காலை சிறப்பு அதிரடிப்படையினா், இராணுவம் மற்றும் காவல்துறையினர் இணைந்து நடாத்திய சோதனையில் இராணுவம் பயன்படுத்தும் சில பொருள்கள் மீட்கப்பட்டதாகப் காவல்துறையினர் தொிவித்தனா்.

காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பள்ளிவாசலுக்குள் நுழைந்த காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினா், அங்கு சோதனையிட்டபோது இராணுவம் பயன்படுத்தும் உடல் கவசம், கொமாண்டோ படைப்பிாிவினா் பயன்படுத்தும் நீா் பை, ரி-56 துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் 2 மற்றும் பட்டாசுகள் ஆகியன மீட்கப்பட்டன.

இதனைத் தொடா்ந்து இடம்பெற்ற விசாரணைகளின் அடிப்படையில் அங்கு உள்ள ஒருவா் சந்தேகத்தின் அடிப்படையில் மேலதிக விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார் என்றும் காவல்துறையினர் கூறினர்.

#mankumaba #army #police #mosque

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap