சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து சமூக வலைத்தளங்களின் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், சமூக வலைத்தளங்கள் மீதான தடையை உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.
இத்தடை நீக்கப்படினும், நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு சமூக வலைத்தள பயன்பாட்டின் போது பொறுப்புடன் செயற்படுமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.
#socialmedia #president #banned
Spread the love
Add Comment