சினிமா

எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த திரைப்படம் ‘மான்ஸ்டர்’

 


நெல்சன் வெங்கடேஷன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி ஷங்கருடன் இணைந்து நடித்துள்ள ‘மான்ஸ்டர்’  திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘ஒரு நாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் அடுத்ததாக எஸ்.ஜே.சூர்யாவை வைத்து ‘மான்ஸ்டர்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். ப்ரியா பவானி ஷங்கர் நாயகியாக நடித்திருக்கிறார். கருணாகரன் நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கிறார்.

பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படம் வருகிற மே 17ஆம் திகதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் முன்னோட்டம் (டீசர்) நாளை வெளியாக இருக்கிறது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

#sjsuryah #bavanusangar #teaser #

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.