தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் தற்போதைய தலைவர் எம்.வை.எம். தெளபீக் மெளலவி, அந்த அமைப்பின் ஊடக செயலர் மொஹம்மட் லெப்பை அஹமட் பைரூஸ், பொருளாளர் மொஹிதீன் பாவா மொஹம்மட் பைசர் மற்றும் சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு தரப்பினருடனான மோதலில் கொல்லப்பட்ட ஒருவரின் மனைவி எனக் கருதப்படும் பெண் ஆகியோரை எதிர்வரும் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்களான நால்வரையும் கடந்த 28 ஆம் திகதி மாலை கைது செய்த காத்தான்குடி காவற்துறையினர் அவர்களை 72 மணி நேர தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடாத்­தியுள்ளனர். அத­னை­ய­டுத்து அவர்கள் நீதி­மன்றில் முன்னிலை செய்யப்ப்ட்ட போதே இவ்வாறு விளக்க­ம­றியலில் வைக்க உத்தர்வு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில், தடை செய்யப்பட்ட அமைப்பான தேசிய தெளஹீத் ஜமா அத், மற்றும் ஜமாத்துல் மில்­லதுல் இப்ராஹீமீய்யா சைலானி அமைப்பின் உறுப்பினர்களையும் தேடி தேடுதல் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், சோதனை நடவடிக்கைகளும் தொடர்கின்றன.

காவற்துறையினர், விஷேட அதிரடிப் படையினர், முப்படையினர் இணைந்து இந் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.இந் நிலையில் உயிர்த்த ஞாயிறுதின பயங்க­ரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்­தே­க­ந­பர்கள், வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களைத் தேடி நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். #arrested #eastersundayattackslk #roundups

அந்­த­வ­கையில், இது­வரை முன்­னெ­டுக்­கப்­பட்ட சுற்­றி­வ­ளைப்­பு­களில் 160 க்கும் மேற்­பட்ட சந்­தே­க­ந­பர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக காவற்துறை  தலை­மை­யகம் தெரி­வித்­துள்­ளது.

சி.ஐ.டி. தேடிய முக்­கி­யஸ்தர்  குளி­யா­பிட்­டியில் கைது

தொடர் குண்­டுத்­த­க­கு­தலின் முக்­கிய சூத்­தி­ர­தா­ரி­யாக கரு­தப்­படும், ஷங்­ரில்லா ஹோட்டல் தற்­கொலை தாரி சஹ்ரான் ஹாஷிமின் மிக நெருக்­கத்­துக்கு உரிய நப­ராக கரு­தப்­படும் ஒரு­வரை சி.ஐ.டி. நேற்று கைது செய்­தது.  விஷேட அதி­ரடிப் படை­யி­ன­ருடன் இணைந்து சி.ஐ.டி. முன்­னெ­டுத்த விஷேட நட­வ­டிக்­கையின் போது குளியாப்பிட்டிய, சுபா­ரி­தி­புர பகு­தியில்  இவரை சி.ஐ.டி. கைது செய்­துள்­ளது.  மொஹம்மட் அன்வர் மொஹம்மட் ரிஸ்கான் என அறி­யப்­படும் சந்­தேக நப­ரிடம் சி.ஐ.டி. விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது.

சம்­மாந்­துறை சோதனை

இதே­வேளை உள­வுத்­து­றைக்கு கிடைத்த தகவல் ஒன்­றுக்கு அமைய சம்­மாந்­துறை – மல்கம் பகு­தியில் முன்­னெ­டுக்­கப்­பட்ட சுற்­றி­வ­ளைப்பின் போது ஒரு தொகை வெடி­பொ­ருட்கள் கைப்­பற்­றப்­பட்­ட­தாக காவற்துறைப் பேச்­சாளர் காவற்துறை அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர குறிப்பிட்டுள்ளார்.

கைத்­துப்­பாக்­கிகள் இரண்டு, அதற்கு பயன்­ப­டுத்­தப்­படும் தோட்­டாக்கள் 17, , சுமார் 200 ஜெலட்னைட் குச்­சி­களும் 17 ரி – 56 ரக துப்­பாக்கி ரவை­களும்   டெட்னேட்டர்களும் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன. இதன்­போது இருவர் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­ட­தாக காவற்துறையினர்  கூறினர். அட்­டா­ளைச்­சேனை – பால­முனை கடற்­கரை பகு­தி­யிலும் வெடி­பொ­ருட்கள் மீட்­கப்­பட்­டுள்­ளது

கைக்­குண்டு மீட்பு 

அனு­ரா­த­புரம் – கல்­நேவ, நாமல்­க­முவ பகு­தியில் உள்ள நீர்த்­தாங்­கி­யி­லி­ருந்து கைக்­குண்டு ஒன்று மீட்­கப்­பட்­டுள்­ளது. நீர்த்­தாங்­கியில் கைக்­குண்டு காணப்­ப­டு­வ­தாக தாங்­கியின் உரி­மை­யா­ளரால் காவற்துறையின­ருக்கு தகவல் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதனைத் தொடர்ந்து குறித்த பகு­திக்கு சென்ற  மஹவ கடற்­படை பயிற்சிக் கல்லுரியின் குண்டு செய­லி­ழக்கச் செய்யும் பிரி­வினர் குண்டை செய­லி­ழக்கச் செய்­துள்­ளனர்.

குரு­ணாகல் வெல்­லவ சோத­னையும் கைது­களும்

குரு­ணாகல்  வெல்­லவ பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட ஹதி­ர­வெ­லான பகு­தியில் இரா­ணு­வத்­தினர் மற்றும் காவற்துறையினர், விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் இணைந்து நேற்று  முற்­பகல் தேடுதல் நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­துள்­ளனர். இதன்­போது தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்­புடன் தொடர்­புள்­ள­தாக கரு­த­பப்டும் பல சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

6 வாள்­களும் கோடரி ஒன்றும் கத்தி ஒன்றும் இறு­வட்­டுக்கள், கணினி ஒன்றும் போலி முடிகள் இரண்­டுடன் சந்­தேக நபர்கள் 15 பேர் இவ்­வாறு  கைது செய்யப்பட்டுள்ளனர்..

சந்­தேக நபர்­க­ளிடம் மேல­திக விசா­ர­ணகைள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தாகப் குரு­ணாகல்  பிராந்­திய காவற்துறைஅத்­தி­யட்சர் மஹிந்த திஸா­நா­யக்க தெரிவித்துள்ளார்.

அக்­கு­ரனை சுற்­றி­வ­ளைப்பும் கைது­களும்

அக்­கு­ரணை மற்றும் அதனை அண்­மித்த பகு­தி­களில் இலங்கை இரா­ணு­வத்தின் 11 ஆவது படைப்­பி­ரி­வினர் நேற்று விசேட சோத­னை­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர். காவற்துறையினர்,  விஷேட அதி­ரடிப் படை­யி­னரின் முழு  ஒத்­து­ழைப்­புடன் பிர­தேசம் முழு­வதும் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த சோதனை நட­வ­டிக்­கை­களின் போது, சந்தேகத்தின் பேரில் சுமார் 25 பேர் வரை  கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இதன்­போது துப்­பாக்­கி­யொன்று, போலி­யாக தயா­ரிக்­கப்­பட்ட ஒரு தொகை வாகன இலக்­கத்­த­க­டுகள், ஒரு தொகை பிறப்­புச்­சான்­றி­தழ்கள் மற்றும் சந்தேகத்திற்கு இடமான மோட்டார் சைக்­கி­ளொன்றும் கைப்­பற்­றப்ப்ட்­ட­தாக பாது­க­பபுத் தரப்­பினர் கூறினர்.

இரத்த மாதி­ரி­களை பெற்­றுக்­கொள்ளும்  ஊசி­களும் வீடொன்­றி­லி­ருந்து  கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன. அவை இலங்­கையின் வைத்­தி­யர்கள் பயன்­ப­டுத்­தாத ஊசிகள் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. எந்த நோக்­கத்­திற்­காக இவை கொண்­டு­வ­ரப்­பட்டு அவ்­வீட்டில் வைக்­கப்­பட்­டி­ருந்­தன என்­பது தொடர்­பான மேல­திக விசா­ர­ணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்­துடன், குண்டு தயா­ரிப்­பிற்கு பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும் 150 சேர்கிட் பிரேக்­கர்ஸ்­களும் கைப்­பற்­றப்­பட்­ட­தாக பாது­காப்புத் தரப்­பினர் கூறினர்.

அக்­கு­ரணை பகு­தியில் அமைக்­கப்­பட்­டி­ருந்த இலங்கை தௌஹீத் ஜமாத் அமைப்பின் அலு­வ­ல­கத்­தையும்  பாது­காப்பு பிரி­வினர் சோத­னை­யிட்­டுள்­ளனர். இதன்­போது  இறு­வெட்­டுகள், 4 கம­ராக்கள், ஒரு தொகை துண்­டுப்­பி­ர­சு­ரங்கள் உள்­ளிட்ட சில பொருட்­களை பாது­காப்புத் தரப்­பினர் கைப்­பற்­றி­யுள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

கஹட்­ட­கஸ்­தி­கி­லி­யவில் சிக்­கிய தோட்­டாக்கள்

கஹ­ட­கஸ்­தி­லிய காவற்துறையின­ருக்கு கிடைத்த இர­க­சியத் தக­வ­லுக்கு அமைய குறித்த பகு­தியில் முன்­னெ­டுக்­கப்­பட்ட சுற்­றி­வ­ளைப்பில் வீடொன்­றி­லி­ருந்து துப்பாக்கி  ரவைகள் 80 உட்­பட இரா­ணு­வத்­தினர் பயன்­ப­டுத்தும்  சில உப­க­ர­ணங்­களும் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன. குறித்த வீட்டில் வசித்து வந்த முன்னாள் இரா­ணுவ வீரர் ஒரு­வரும் அவ­ரது தந்­தையும் சந்­தே­கத்தின் பேரில் இதன்­போது கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

பத்­தே­க­மவில் 30 பேர் சந்­தே­கத்தில் கைது

பத்­தே­கம, இந்­தி­கஸ்­க­டிய பகு­தியில் 30 பேர் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். பல்­வேறு பகு­தி­க­ளையும் சேர்ந்த சந்­தேக நபர்கள் தமது ஆள்  அடையாளத்தை  உறு­திப்­ப­டுத்த முடி­யாத நிலையில் காவற்துறையினரால் இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

மஹி­யங்­கனை பள்­ளியில் தீ பரவல்

மஹி­யங்­கனை நகரில் அமைந்­துள்ள பள்­ளி­வாசல் ஒன்றில்   நேற்று முன் தினம் இரவு தீ பர­வி­யுள்­ளது.பள்­ளி­வா­சலில் வைக்­கப்­பட்­டி­ருந்த புத்­த­கங்கள் தீயில் கருகி உள்ளதாக  காவற்துறையினர்  கூறினர். சம்­பவம் தொடர்பில் 3 சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்­டதன் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கெப்பிதிகொல்லேவையில் கைதான ஐவர்

உயிர்த்த ஞாயிறு  தாக்குதல்களின் வீடியோ காட்சிகள்,  கையடக்க்த் தொலைபேசிகள்,  தெளஹீத் ஜமா அத் தலைவர்களின் புகைப்படங்கள்,  வனாத்துவில்லு பயிற்சி முகாமின் புகைப்படங்கள்  மற்றும் வீடியோக்களுடன்  முஸ்லிம் இளைஞர்கள் ஐவர் கெப்பிதிகொல்லேவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  குறித்த நகரில் இராணுவத்தினர் காவற்துறையினருடன் இணைந்து முன்னெடுத்த சோதனைகளின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கெப்பிதிகொல்லேவ பகுதியில் தொழில் நிமித்தம் தங்கியிருந்துள்ளதுடன் வவுனியா, கின்னியா மற்றும் காங்கேசந்துறை அகைய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என காவற்துறையினர்  கூறினர். இவர்களில் ஹொரவ்பொத்தானை வீதியில் இராணுவ வீதிச் சோதனை சாவடியை வீடியோ எடுத்த இருவரும் அடங்குவதாக காவற்துறையினர்   தெரிவித்துள்ளனர்.