Home உலகம் பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர்  பதவிநீக்கப்பட்டுள்ளார்…

பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர்  பதவிநீக்கப்பட்டுள்ளார்…

by admin


பிரித்தானிய பாதுகாப்பு  செயலாளர்  கவின் வில்லியம்ஸன் பதவநீக்கப்பட்டுள்ளார். புதிய 5ஜி வலையமைப்பை உருவாக்குவதற்காக, ஹூவாவியின் மட்டுப்படுத்தப்பட்ட அணுகலை அனுமதிப்பதற்கு பிரித்தானியா திட்டமிட்டுள்ள நிலையில் இது தொடர்பான உயர்மட்ட தகவல்களை கசியவிட்டதாக தெரிவிதது  பிரதமர் தெரேசா மே நேற்றையதினம் அவரை பதவி நீக்கியுள்ளார். இதனையடுத்து புதிய பாதுகாப்பு  செயலாளராக பென்னி மோர்டன்ட் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் தன்மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள கவின் வில்லியம்ஸன் முறையான விசாரணைகளின் மூலம் தனது நிலைப்பாட்டை நிரூபிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டுமுதல் கவின் வில்லியம்ஸன் பாதுகாப்பு அமைச்சராக பதவிவகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More