குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி புநகரி பிரதேச செயலக பிரிவில் கிராஞ்சி பகுதியில் யானை தாக்கியதில் மூன்று பிள்ளைகளின் தாய் மரணமடைந்துள்ளார். அவரது ஒரு வயது பெண் குழந்தையும் காயமடைந்து சிகிசைப் பெற்று வருகின்றார்.
இன்று(02-05-2018) காலை 6.30 மணியளவில் வீட்டுக் காணிக்குள் புகுந்த யானையால் குறித்து பெண் தாக்குதலுக்குள்ளாகி வேரவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மேலதிக சிகிசைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.
சம்வத்தில் கிராஞ்சி சிவபுரத்தைச் சேர்ந்த சிவனேசன் சுபாசினி வயது 32 என்பரே மரணமடைந்துள்ளார்.
#kilinochchi #elephant #dead #child #attack
Add Comment