இலங்கை பிரதான செய்திகள்

சாய்ந்தமருது அல்ஹிலால் வீதியிலிருந்து சொட்கன் துப்பாக்கி மீட்பு


காவல்துறையினரின் விசேட தேடுதலின் போது சொட்கன் துப்பாக்கி ஒன்று கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. கல்முனை விசேட நடவடிக்கைக்கு பொறுப்பான காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் உரப்பை ஒன்றில் இடப்பட்டு சாய்ந்தமருது அல்ஹிலால் வீதியில் இருந்து மீட்கப்பட்டது.

இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கி இயங்கு நிலையில் காணப்படுவதுடன் ஏதேனும் குற்றச்செயல் ஒன்றிற்காக இவ்விடத்திற்கு எடுத்து செல்லப்பட்டனவா என்பது தொடர் பில் விசாரணையை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

தற்போது துப்பாக்கி மீட்கப்பட்ட பிரதேசம் இராணுவத்தின் விசேட பிரிவினரின் தேடுதல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அங்குள்ள பொதுமக்கள் குறிப்பிட்டன
பாறுக் ஷிஹான்

#gun #sainthamaruthu #kalmunai #police

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.