இலங்கை பிரதான செய்திகள்

காத்தான்குடியில் மர ஆலையில் தீவிபத்து – ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சேதம்


மட்டக்களப்பு காத்தான்குடியில் மர ஆலையொன்று தீப்பிடித்து எரிந்தமையினால் குறித்த மர ஆலை முற்றாக சேதமடைந்துள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புதிய காத்தான்குடி பிர்தௌஸ் பாடசாலை வீதியிலுள்ள மர ஆலையே இன்று அதிகாலை இவ்வாறு தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனையடுத்து மட்டக்களப்பு மாநகர சபையின் தீ அணைக்கும் பிரிவினர் ஸ்தலத்திற்கு விரைந்து தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இந்த சம்பவத்தினால் குறித்த மர ஆலை முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதுடன், அங்கிருந்த பெறுமதியான மரங்கள் மற்றும் இயந்திரங்கள் என்பனவும் எரிந்து நாசமாகியுள்ளன எனவும் இதனால் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது

தீ பரவியமைக்கான காரணம் தொடர்பாக இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், காத்தான்குடி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

#kaththankudi #fire #batticaloa

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.