குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் வங்காலை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடல் அட்டைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வங்காலை கிராமத்தைச் சேர்ந்த சேர்ந்த 37 வயதுடைய நபரொருவரே நேற்று செவ்வாய்க்கிழமை (7) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 720 கிலோ கிராம் கடல் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று கடற்படை தெரிவித்துள்ளது.கடற்படையினரும்,விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட நபர் மற்றும் மீட்கப்பட்ட கடலட்டைகள் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.குறித்த நபர் உரிய அனுமதிப்பத்திரம் இன்றி கடல் அட்டைகளை வைத்திருந்தமையினாலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
மன்னார் வங்காலையில் 720 கிலோ கடல் அட்டைகளுடன் ஒருவர் கைது : #mannar #arrest
Add Comment