பிரதான செய்திகள் விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட்டின் வெளியேற்றுதல் சுற்றில் டெல்லி வெற்றியீட்டியுள்ளது


ஐபிஎல் கிரிக்கெட்டின் வெளியேற்றுதல் சுற்றில் சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணி டெல்லி கப்பிட்டல்ஸ் அணியிடம் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது. இரு அணிகளுக்குமிடையே இன்றிரவு விசாகப்பட்டினத்தில் ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணி களத்தடுப்பை தேர்வு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இதனையடுத்து 163 என்ற வெற்றிஇலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 19.5 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதனையடுத்து சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணி போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.

இதனைத் தெடர்ந்து; 10ம் திகதி நடைபெறும் 2-வது தகுதி சுற்று போட்டி டெல்லி அணியும் சென்னை அணியும் போட்டியிட்டு அதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது

#ipl #Sunrisershyderabad  #Delhicapitals  #chennaisuperkings

 

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap