இந்தியா பிரதான செய்திகள்

மகாராஷ்டிரவில் புடவைக் குடோனில் தீவிபத்து – 5 தொழிலாளர்கள் பலி


மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே புடவைக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை குடோனின் ஒருபகுதியில் பற்றிய மீ ஏனைய பகுதிகளுக்கும் பரவியதனால் புடவைகள் தீப்பிடித்து எரிந்ததனால் அங்கு வேலைசெய்த தொழிலாளர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்ட போதிலும் சிலர் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர் கடுமையாகப் போராடி தீயை கட்டுப்படுத்திய போதிலும் இந்த தீ விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் பல லட்சம் ரூபாய் பெறுமதியான புடவைகள் அழிந்துள்ளதாகவும் தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#maharashtra #fire

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.