உலகம் பிரதான செய்திகள்

ஜப்பானில் குழந்தைகள் பாடசாலையில் கார் புகுந்து விபத்து – 2 குழந்தைகள் பலி

ஜப்பானில் குழந்தைகள் பாடசாலையொன்றில் மாணவர்கள் கூட்டத்திற்குள் கார் புகுந்து விபத்து ஏற்பட்டதில் ; 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஜப்பானின் ஷிகா பிராந்தியத்தில் உள்ள ஓட்சு நகரில் உள்ள குழந்தைகள் பாடசாலையில் நேற்றையதினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மூன்று ஆசிரியர்கள் 10-க்கும் மேற்பட்ட மாணவர்களை அழைத்துக்கொண்டு பாடசாலைக்கு அருகே உள்ள ச வீதியோரம் நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்த போது வீதியில் வந்துகொண்டிருந்த கார் மற்றொரு கார் மீது மோதிய போது நிலைகுலைந்த கார் மாணவர்கள் கூட்டத்துக்குள் புகுந்து விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதில் 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 3 குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.விபத்துக்கு காரணமான 2 கார்களையும் செலுத்திவந்த 62 மற்றும் 52 வயதான 2 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

#japan # Kindergarten   #accident #children #dead

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.