தமிழில் முன்னணி நடிகையாக வலம் தமன்னா, தற்போது தமிழ் திரைப்படங்களில் பெரும் வரவேற்பை பெற்ற நடிகைகளான நயன்தாரா, திரிஷா வழியை பின்பற்றி படங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றார்.
நயன்தாரா, திரிஷா போன்ற முன்னணி கதாநாயகிகள், பெண்களின் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது தமன்னாவும் இணைந்துள்ளார். அவர் நகைச்சுவை கலந்த புதிய திகில் படத்தில் நடித்து வருகின்றார்.
தமன்னா தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கும் நோக்கில், பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படுகின்ற திரைப் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார். முதன்முதலாக அவர் திகில் கலந்த நகைச்சுவை படத்தில் நடிக்க இருக்கிறார். அவருடன் யோகி பாபு, முனீஸ்காந்த், சத்தியன், காளி வெங்கட், `சின்னத்திரை’ புகழ் டி.எஸ்.கே. ஆகியோரும் நடிக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைக்கிறார். ஜி.ஆர்.சுரேந்தர்நாத் வசனம் எழுதுகிறார். ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன்ஸ் சார்பில் படம் தயாராகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு பிரச்சினை இருக்கும். அதுபோல் தமன்னாவுக்கும் ஒரு பிரச்சினை இருக்கிறது. அதை அவர் நண்பர்களுடன் சேர்ந்து எப்படி தீர்க்கிறார்? என்பது, இந்த படத்தின் கதை. படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது. தொடர்ந்து காரைக்குடியில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது’
Add Comment