இந்தியா பிரதான செய்திகள்

அசாமில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் – ஒருவர் பலி- 14 பேர் காயம் – ஊரடங்கு :

அசாம் மாநிலம், ஹைலகண்டி நகரில் நேற்று இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 14 பேர் படுகாயமடைந்ததனையடுத்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மோதலின் பொது ஏராளமான வாகனங்கள், கடைகள் அடித்து நொருக்கப்பட்டதாகவும் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மோதலினை தடுத்ததுடன் காயமடைந்த 15 பேரை மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த மோதலைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் காணப்பட்டதனையடுத்து துணை ராணுவம் மற்றும் அசாம் ரைபிள் பிரிவு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை இரவு 7 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

நேற்று பிற்பகல் பள்ளிவாசலுக்கு முன்பு ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் வீதியில் அமர்ந்து வழிபாட்டில் ஈடுபட்டதாகவும் வீதியில் அமர்ந்து வழிபாட்டில் ஈடுபட எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு பிரிவினர் மறியலில் ஈடுபட்டதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Assam #killed #injured #curfew

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.