பிரதான செய்திகள் விளையாட்டு

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி இன்று


12 ஆவது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி இன்றையதினம் நடைபெறவுள்ளது. சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையிலான இந்தப் போட்டி, ஹைதராபத்தில் இன்றிரவு ஆரம்பமாகவுள்ளது.

ஐபிஎல்லின் இந்தக் சீசனில் இரு அணிகளுக்குமிடையில் நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டி உட்பட 3 போட்டிகளிலும் மும்பை அணியே வென்றுள்ள நிலையில் இவ்விரு அணிகளும் நான்காவது தடவையாக போட்டியிடவுள்ளன.

சென்னை அணி இதுவரை 8ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளதுடன், 3 போட்டிகளில் வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரித்துள்ள அதேவேளை மும்பை அணி 5 ஆவது தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடுகின்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010, 2011, 2018 ஆண்டுகளிலும் மும்பை இந்தியன்ஸ் 2013, 2015, 2017 ஆகிய ஆண்டுகளிலும் ஐ.பி.எல். கிண்ணத்தை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#ipl #chennaisuperkings #mumbaiindians

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.