உலகம் பிரதான செய்திகள்

பாகிஸ்தான் நட்சத்திர விடுதியில் தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்


பாகிஸ்தானின் குவாதர் நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் புகுந்து தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த அதிகளாவான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் குறித்த 5 நட்சத்திர விடுதியில் நேற்று மாலை பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த 3 பயங்கரவாதிகள் காவலாளியை சுட்டுக் கொன்றதுடன் அங்கு தங்கியிருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள முயன்றுள்ளனர்.

இதனையடுத்து தகவலறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டள்ளது. இந்த பயங்கரவாத சம்பவத்துக்கு பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

#pakistan #5starhotel #shooting

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.