பண்டாரவளை பிரதேசத்தில் போலி வணிக வளாகமொன்று சுற்றிவளைக்கப்பட்டதாகப் பண்டாரவளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த வணிக வளாகத்திலிருந்து பிறப்பு சான்றிதழ்கள், அடையாள அட்டைகள், இறப்பர் முத்திரைகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த வணிக நிலையத்திலிருந்து சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த இருவரும் பண்டாரவளை மற்றும் ஹப்புத்தலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களெனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். #bandarawelasrilanka
Add Comment