உலகம் பிரதான செய்திகள்

புர்கினா பாசோவில் தேவாலயத்தில் தாக்குதல் – பாதிரியார் உட்பட 6 பேர் பலி :


மேற்கு ஆபிரிக்க நாடான புர்கினா பாசோவின் வடக்குப்பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் துப்பாக்கி ஏந்திய ஆயுததாரிகள் மேற்கொண்ட தாக்குதலில் பாதிரியார் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.  உள்ளூர் நேரப்படி நேற்றுக்காலை வழிபாடு நடந்துகொண்டிருந்த போது 20 முதல் 30 வரையிலான தாக்குதல்தாரிகள் தேவாலயத்துக்கு தீ வைத்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அத்துடன் ஏனைய கட்டடங்களுக்கும் தீ வைக்கப்பட்டதுடன் ஒரு மருத்துவ மையமும் சூறையாடப்பட்டதாக அந்த நகரின் மேயர் தெரிவித்துள்ளார்.

2016 முதல் ஜிஹாதிய வன்முறை அதிகம் நடந்துவரும் புர்கினோ பாசோவில், கடந்த ஐந்து வாரங்களில் தேவாலயங்களை குறிவைத்து நடத்தப்படும் மூன்றாவது தாக்குதல் இதுவாகும்.

அல்-கய்தா, ஐஎஸ் ஆகியவற்றுடன் தொடர்புடையவர்கள் மற்றும் உள்ளூரின் அன்சருள் இஸ்லாம் அமைப்பின் ஆயுதப் போராளிகள் இங்கு செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

  #BurkinaFaso   #church  #killed #priest #isis

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.