உலகம் பிரதான செய்திகள்

மெக்ஸிக்கோவில் 35 சடலங்கள் கண்டுபிடிப்பு


மெக்ஸிக்கோவின் இரண்டாவது நகரமான குவாடலஜராவின் நகர்ப் பகுதியையில் 35 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தவருடம் குழுக்களுக்கிடையிலான மோதலின் போது சுமார் 29,000 கொலைகள் இடம்பெற்ற நிலையில் இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குவாடலஜராவின் ஸபோபான் பகுதியில் மேற் கொள்ளப்பட்ட விசாரணையின் போது புதைத்த நிலையில் 27 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் மற்றொருரு புதைகுழியிலிருந்து ஏழு மனித மண்டையோடுகள் கண்டுபிடிக்கப்பட்டள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு புதைகுழிகள் கண்டுபிக்கப்பட்ட நிலையில் சந்தேகநபர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது  #Mexico #graves

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.