இலங்கை பிரதான செய்திகள்

பொதுச்சந்தையில் புதிதாக வரிகள் அறவிடுவது தொடர்பில் சபையில் அமளி துமளி

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பொதுச்சந்தையில் நடைமுறையிலுள்ள வரி மற்றும் கட்டணங்களை  விட புதிதாக வரிகள் அறவிடுவது தொடர்பாக  இன்றைய(13) சபை அமர்வின் போது கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் போது ஆளும் மற்றும் எதிர் தரப்பினர்களுக்கு இடையே  அமைதியின்மை ஏற்பட்டது. இதனையடுத்து கரைச்சி பிரதேச சபையின் நடவடிக்கைகள் பத்து நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டு ஆரம்பிக்கப்பபட்டது.

பொதுச் சந்தையில் இதுவரை காலமும் வியாபார உரிமை வரி 1050 ஆக காணப்பட்டது இதனை 3000 ஆக உயர்த்துவதற்கும் பழக்கடைகள், மீன்வெட்டும் கழிவுகள், தேனீர் கடைகள்,மரக்கறி கடைகள் ஆகியவற்றுக்கு  புதிதாக 900 ரூபாவும் , பான்சி, படவை கடைகளுக்கு 500 ரூபாவுமாக கழிவுகளை அகற்ற புதிதாக கட்டணத்தை அறவிடுவதற்கும் இன்றைய  சபை அமர்வில் ஆளும் தரப்பினரால் தீர்மானம் முன்மொழியப்பட்டது.

இதன் போது எதிர்தரப்பு உறுப்பினர்கள் இந்த புதிய கட்டண அறவீட்டுக்கு தங்களின் எதிர்ப்பினை வெளியிட்டார்கள்.  சந்தை வியாபாரிகள் போதுமான  வருமானம் இன்றி காணப்படும் இச் சூழலில்  இதுவரைக் க ாலமும் இல்லாது தற்போது புதிய புதிய கட்டணங்களை அறவிடுவது அவர்களை மேலும் பாதிக்கும் எனவும் எனவே  இதனை தற்போதைய சூழ்நிலையில் நிறுத்துமாறு கோரியிருந்தனர்.

எனவே இது தொடர்பில் ஆளும் மற்றும் எதிர் தரப்பு உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட விவாதம் வாய்த்தர்க்கமாக மாற  ஆளும் தரப்பு உறுப்பினர் ஒருவர் சந்தை வியாபாரிகளை பைத்தியகாரர்கள் என்று விழித்து பேசியபோது சபையில் அமைதியின்மை ஏற்பட்டது இதன் போது தவிசாளர் சபையினை பத்து நிமிடங்களுக்கு ஒத்தி வைத்தார்.

.பின்னர் மீண்டும்  சபை ஆரம்பிக்கப்பட்ட போது சபையின் தவிசாளர் அவர்கள் நாகரீகமற்ற வார்த்தை பிரயோகம் பாவித்தது தவறு என்று சபையில் தவிசாளர் பகிரங்க மன்னிப்பு கோரி சபையினை கொண்டு நடத்தினார்.

#கரைச்சி #tax #karaichi

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers