Home இலங்கை உடையார் கட்டில் விபத்து – மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

உடையார் கட்டில் விபத்து – மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

by admin


முல்லைத்தீவு பரந்தன் ஏ35 வீதியின் உடையார் கட்டு சந்திப்பகுதியில் இன்று (13.05.2019) இடம்பெற்ற வீதி விபத்தில் உழவனூர் பகுதியினை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார். இன்று காலை உடையார் கட்டுப்பகுதியில் இறைச்சி வியாபாரத்திற்காக சென்று கொண்டிருந்த வேளை தனியார் பேருந்து ஒன்றுடன் மோதி ஏற்பட்ட விபத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தினை தொடர்ந்து விபத்து ஏற்பட்ட இடத்திற்கு சென்ற புதுக்குடியிருப்பு வீதிப்போக்குவரத்து காவல்துறையினர்   விசாரணைகளை மேற்கொண்டு உடலத்தினை பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனை கொண்டுசென்றுள்ளார்கள்.

உழவனூர்,புன்னை நீராவியடி பகுதியினை சேர்ந்த 41 வயதுடைய இ.தவரூபன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த விபத்தினை தொடர்ந்து தனியார் பேருந்தின் சாரதி புதுக்குடியிருப்பு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 20.05.19 வரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது   #accident #விபத்து #paranthan

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More