இந்தியா பிரதான செய்திகள்

மு.க.ஸ்டாலின் தங்க உள்ள விடுதியில் தேர்தல் அதிகாரிகள் சோதனை

தூத்துக்குடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தங்க உள்ள விடுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு எதிர்வரும் மே 19ம்திகதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஒட்டப்பிடாரம் தொகுதி வேட்பாளரை ஆதரித்து இன்று மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்யவுள்ளார்.
அதற்காக இன்று ஒட்டப்பிடாரம் தொகுதி செல்லும் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் தங்க திட்டமிட்டிருந்த விடுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

பணப்பட்டுவாடா முறைப்பாடு காரணமாக விடுதியில் உள்ள அரசியல் பிரமுகர்களின் வாகனங்கள் உள்ளிட்டவற்றிலும் சோதனை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

#MKStalin #electionofficials #checking  #மு.க.ஸ்டாலின்

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers