Home பிரதான செய்திகள் இலங்கை இளையோர் அணியின் பிரதம பயிற்றுவிப்பாளராக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை இளையோர் அணியின் பிரதம பயிற்றுவிப்பாளராக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

by admin

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் இலங்கை இளையோர் அணியின் பிரதம பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்தப் பொறுப்பை வகித்த அவிஷ்க குணவர்தனவிற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை விதித்ததை அடுத்தே சமிந்த வாஸ் இவ்வாறு அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்

இலங்கை இளையோர் அணி அடுத்த மாதம் தென் ஆபிரிக்காவிற்கு செல்லவுள்ள நிலையில் அந்தத் தொடரிலிருந்து சமிந்த வாஸ் பிரதம பயிற்றுவிப்பாளராக செயற்படவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

அத்துடன் 19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராகவும் சமிந்த வாஸ் செயற்பட்டு வருகின்றார்.

15 வருடங்களுக்கு மேல் இலங்கை அணிக்காக விளையாடியுள்ள சமிந்த வாஸ், 335 டெஸ்ட் விக்கெட்களையும் 400 சர்வதேச ஒருநாள் விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

#இலங்கை  #இளையோர்அணி  #சமிந்தவாஸ்  #chamindavaas

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More