பிரதான செய்திகள் விளையாட்டு

பாகிஸ்தானுக்கெதிரான 3-வது ஒருநாள் போட்டி – 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி


பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியினை 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றுள்ளது. இருநாடுகளுக்குமிடையில் நேற்று பிரிஸ்டோலில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் நாணயணச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்திருந்தது. இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 358 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து 359 ஓட்டங்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 44.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 359 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.

#pakistan #england #odi #பாகிஸ்தான் #ஒருநாள் போட்டி #இங்கிலாந்து

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.