உலகம் பிரதான செய்திகள்

பப்புவா நியூ கினியாவில் கடுமையான நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள தீவில் நேற்று மாலை 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 7.5 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகாத நிலையில் பப்புவா நியூ கினியா மற்றும் அருகாமையில் உள்ள சாலமன் தீவு ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடிக்கடி நிலநடுக்கங்களை சந்தித்துவரும் பப்புவா நியூ கினியா நாட்டில் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 26-ம் திகதி ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்திருந்ததுடன் பலகோடி மதிப்பிலான சொத்துகள் சேதம் அடைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது

#பப்புவாநியூகினியா #நிலநடுக்கம் # சுனாமி #PapuaNe Guinea #earthquake #tsunami

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.