இலங்கை பிரதான செய்திகள்

முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறை – மே 2019..

முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறை – மே 2019 – சமாதானம்,அகிம்சைமற்றும் சமத்துவத்திற்கானபெண்கள்.. எமது கூற்று..

இலங்கையில் நீதி, சமத்துவம், அர்த்தமுள்ள சமாதானம் ஆகியவற்றை நிலைநாட்ட செயற்படுபவர்கள் நாங்கள். முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறை எமது தீவின் பல இடங்களிலும் வெடித்துள்ள நிலையில இதனை எழுதுகிறோம்.

13.05.2019 அன்று பள்ளிவாசல்கள், முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான கடைகள் வடமேல் மாகாணத்தின் சிலாபத்தில் வன்முறைக் கும்பலால் தாக்குதலுக்கு உள்ளாகின. நேற்றும் (14.05.2019) வட மேல் மாகாணத்தில் உள்ள கினியாம, கொட்டம்பிட்டிய போன்ற பல இடங்களில் வன்முறை நிகழந்ததை அறிகின்றோம். இவை இன்னும் தொடர்கின்றன.

தமிழருக்கு எதிரான வன்முறை நிகழ்ந்த பலநுறு உயிர்களைப் பலிகொண்ட 1983 கறுப்பு ஜூலை மாதத்தை எம்மில் பலர் முகம் கொடுத்து வாழ்ந்த அனுபவம் உடையவர்களாக உள்ளோம். பல ஆயிரம் உயிர்களைக் காவு கொண்ட உள்நாட்டுப் போhக்.கால கட்டத்திற்கு ஊடாக வாழ்ந்த கசப்பான அனுபவத்தை உடையவர்கள் நாங்கள், 2014 இல் அழுத்கமவிலும் கடந்த வருடம் திகணவிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை நிகழ்ந்தபோது நாங்கள் பயத்துடன் இருந்தோம். ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் நிகழ்ந்த வன்முறையால் இறந்தவர்களையும், காயம் அடைந்தவர்களையும் சிதைந்த குடும்பங்களையும் பற்றி ஆறாத துயரம் கொண்டவர்களாக உள்ளோம்.

சகல மனிதாபிமானத்துக்குமான விண்ணப்பமாக இந்த விண்ணப்பத்தை நாங்கள் எழுதுகிறோம்.

சகல இலங்கைப் பிரஜைகளையும் தத்தமது பெறுமதி, நம்பிக்கை சமயம், மனிதாபிமானம் பற்றி ஆழ்ந்து சிந்தியுங்கள் என வேண்டுகி;றோம். என்ன விலை கொடுத்தாவது வன்முறைக்கு எதிராகச் செயற்படுமாறு சகல இலங்கை பிரஜைகளையும் வற்புறுத்தி வேண்டுகின்றோம். ஒருமித்த அரசியல் தலைமைத்துவத்துடன் வன்முறையை உடனடியாக ஒழித்து, பொறுப்புடமை நியாயம் ஆகியவற்றுக்கான அர்ப்பணிப்புடன் செயற்படுங்கள் என எமது பிரதிநிதிகளை வற்புறுத்துகின்றோம். நிறுத்த முடியாத ஒரு யுத்தத்தை நோக்கிய பாதையில் மீண்டும்; அடி எடுத்து வைக்க மாட்டோம் என உறுதிபூணுமாறு சகலரையும் கேட்கி;றோம்

மேலும் மேலும் நிகழும் மரணங்களுக்காகத் துக்கம் அனுஷ்டிப்பதில் அர்த்தமில்லை. இவை நிகழ்ந்தபின் கூறுபவை வெற்றுரைகள் ஆகும். பாவத்திற்கு மன்னிப்பு கேட்கவோ உடந்தையாக இருந்தமைக்கு விளக்கம் அளிக்கவோ எம்மால் முடியாமற் போய்விடும். ஒரு தேசம் என்ற வகையில் இவ்வளவு கஸ்டங்களையும் அனுபவித்தும் இன்னுமொரு கறுப்பு ஜூலை நிகழ்வதைத்த தடுக்க முடியாவிட்டால் நாம் எதனைச் சாதித்தோம்?

எங்கள் கூட்டுப் பிராத்தனையில் எல்லா மக்களையும் குறிப்பாக இத் தருணத்தில் வலுவற்றவர்களாக உணரும் அனைவரையும் உள்ளடக்குகிறோம்.

நாங்கள் வன்முறையை எதிர்த்துச் செயற்படுவோம். வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்வோம்!.

ஜூலை 83

படுகொலைகளைப்

பார்த்துக் களித்தார் பற்றி

நான் நினைத்துப் பார்ப்பதுண்டு

அத்தனை கெஞ்சும் கண்களும்

அவர்கள் நாட்களூடும்

வருடங்களூடும்

மின்னலாய்க் குத்துவதில்லையா?

சாகுமுன் ஆதரவற்று

அழுது குளறும்

அனாதைக் குழந்தைகளின்

குரல்கள் அவர்கள் இரவுகளைக்

கொள்ளையிடுவதில்லையா?

நாற்பது வருடங்களின் பின்

மீண்டும் தீச்சுவாலை.

அந்திவானம் வன்முறையால்

இரத்தமயமாகிறது

திருமண உறவால் மட்டும்

தொடர்புடையவள் ஆயினும்

நான் குற்றவாளியாயும்

பாதிகப்பட்டவளாயும்

இருப்பதை உணர்கிறேன்

புகைச் சுருளைக் கண்டு

முகம் சுழிக்கிறேன்

தீயை நினைத்துக்

குறுகிப் போகிறேன்

ஆனால் சிலரோ

எரியும் நெருப்பில்

குளிர் காய்கிறார்கள்

ஆங்கில மூலம் ஆன் றணசிங்க 1983. (கவிதையின் பகுதிகள்)

தமிழில் சோ.பத்மநாதன்

சமாதானம், அகிம்சை மற்றும் சமத்துவத்திற்கான பெண்கள் #Eastersundayattacklk

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.