இலங்கை பிரதான செய்திகள்

றிசாட்டுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைக்கு மன்னார் தமிழரசு கட்சியினர் ஆதரவு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கடந்த வாரம் கூட்டு எதிர் கட்சியினால் வன்னி பாரளுமன்ற உறுப்பினரும் கைத்தொழி வணிக வர்தக அமைச்சருமான ரிசாட் பதியுதீன் மீது முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரனைக்கு ஆதரவு வழங்க வேண்டும் என மன்னார் மாவட்ட தமிழராசு கட்சி உறுப்பினர்களால் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கொண்டு வரப்பட்ட அவசரகால சட்டத்தை மேலும் நீட்டிப்பதற்கு ஆதரவு வழங்குவதா? இல்லையா? என்பது தொடர்பாகவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மீது கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கை இல்லா பிரேரணை தொடர்பாகவும் எவ்வாறு பாராளுமன்றத்தில் தீர்மானம் மேற்கொள்வது தொடர்பாக மன்னார் மாவட்ட தமிழரசுக் கட்சி உயர்மட்ட குழுவின் கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை 4 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் இடம் பெற்றது.

குறித்த கலந்துரையாடலின் போதே குறித்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தற்போது அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட அவசர காலச் சட்டத்தினால் தமிழ் மக்கள் திட்டமிட்டு பழி வாங்கப்படுவதனாலும் பல்கலைக்கழக மாணவர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மீது திட்டமிட்டு குற்ற நடவடிக்கைகள் எடுப்பதனால் நிச்சயமாக அவசரகால சட்டத்தை எதிர்க்க வேண்டும் எனவும் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்ப்பட்டது.

அவசரகாலச் சட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு இல்லாவிட்டாலும் பாராளுமன்றத்தில் நிச்சயம் வெற்றி பெறும் எனற்போதிலும் இவ் அவசர கால நிலமையினை பயன்படுத்தி எமது மக்கள் பழி வாங்கப்படுகின்றனர்.

எனவே நம்பிக்கையில்லா பிரேரணையின் காலப்பகுதி ஒரு மாதம் ஆகும். அவ் காலப்பகுதி நிறைவடைந்த பின்னர் மீண்டும் பாராளுமன்றத்தில் இதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படும் போது அதற்காக ஆதரவை வழங்கப்போவது இல்லை என மன்னார் மாவட்ட உயர் மட்ட குழு தீர்மானிதுள்ளோம்.

அதே நேரத்தில் குண்டு வெடிப்பில் சம்மந்த பட்ட ஒருவரை விடுவிப்பதற்காக அமைச்சர் ரிசாட் பதியுதீன் மூன்று தடவை இராணுவ தளபதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும் அவர் மூலமாக மன்னார் மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு சீர் குழைந்துள்ளதாகவும் அதே நேரத்தில் அண்மையில் தாராபுரபகுதியில் அமைச்சருக்கு சொந்தமான விடுதியில் சந்தேத்திற்கு இடமான இலக்கத்தகடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

ஆனலும் குறித்த இலக்க தகடானது இலங்கை மோட்டார் வாகன திணைக்களத்தினால்; (ஆர்.எம்.பி) வினியோகிக்கப்படவில்லை எனவும் எதோ ஒரு வகையில் தவறான நடவடிக்கைகாகவே குறித்த இலகக்கத் தகடு பயன் பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது
இது தொடர்பான முழுமையான விசாரணைகள் நடத்துவதற்காக அவர் மீது கொண்டு வரப்படுகின்ற நம்பிக்கை இல்லா பிரேரணையை ஆதரித்து அவருக்கும் இந்த தற்கொலை குண்டு தாக்குதலுக்கும் தொடர்பு உள்ளதா? இல்லையா? என்பது தொடர்பாகவும் குறுகிய காலத்தில் அவர் எவ்வாறு செல்வந்தராக வந்தார்? என்பது தொடர்பாகவும் விசாரிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

அத்துடன் ஒட்டு மொத்த மன்னார் தமிழ் அரசு கட்சி உயர் மட்ட குழுவினராலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#ரிசாட்பதியுதீன்  #நம்பிக்கையில்லாபிரேரணை #தமிழரசுகட்சி  #RishadBathiudeen #mannar

 

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.