பிரதான செய்திகள் விளையாட்டு

இத்தாலி ஓபன் டென்னிஸ் – நடால் – ஜோஹன்னா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

ரோம் நகரில் நடைபெற்று வருகின்ற இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபெல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.  நடப்பு சம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ஸ்பெயின் நாட்டின் ரபெல் நடால் nரையிறுதிப் போட்டியில் 6-3, 6-4 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள கிரீஸ் நாட்டின் சிட்சிபாஸ்சை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இந்த ஆண்டில் களிமண் தரை போட்டியில் ரபெல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதல்முறையாகும்.

அதேவேளை பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதி போட்டியில் இங்கிலாந்து வீராங்கனையான ஜோஹன்னா கோன்டா 5-7, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் கிகி பெர்டென்சை வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#NovakDjokovic #JohannaKonta  #RafaelNadal #இத்தாலிஓபன்டென்னிஸ் #ரபெல்நடால் #ஜோஹன்னாகோன்டா  இத்தாலி ஓபன் டென்னிஸ் , ரபெல் நடால் , ஜோஹன்னாகோன்டா , இறுதிப்போட்டி இறுதிப்போட்டி

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.