இலங்கை பிரதான செய்திகள்

மன்னார் பள்ளிமுனையில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இருவர் கைது :

குளோபல் தமிழ் செய்தியாளர்

மன்னார் பள்ளிமுனை கிராமத்தில் நேற்று திங்கட்கிழமை (20) இரவு சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய வேறு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பிடிக்கப்பட்டு மன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் இடம் பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தை தொடர்ந்து தமிழ் மக்களின் கிராமங்களில் அச்ச நிலை ஏற்பட்டிருந்ததோடு, கிராம மக்களும் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், பள்ளிமுனை கிராமத்தில் பள்ளிமுனை தேவாலய நிர்வாகத்துடன் இணைந்து கிராம மக்கள் இரவு நேரங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று இரவு 11.30 மணியளவில் இரண்டு இளைஞர்கள் பள்ளிமுனை கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய நபர்கள் மீது சந்தேகம் கொண்ட பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களை பிடித்து விசாரணைகளை மேற்கொண்ட போது வேறு பட்ட கருத்துக்களை கூறியுள்ளனர்.

மேலும் குறித்த இருவரும் கற்பிட்டி மற்றும் கொழும்பு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.உடனடியாக குறித்த இருவர் தொடர்பிலும் மன்னார் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், பள்ளிமுனை கிராமத்திற்குச் சென்ற மன்னார் காவல்துறையினரிடம் குறித்த சந்தேக நபர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

குறித்த இருவரையும் கைது செய்து அழைத்துச் சென்ற மன்னார் காவல்துறையினர் மன்னார் கொவல் நிலையத்தில் குறித்த இரு சந்தேக நபர்களையும் தடுத்து வைத்து விசாரணைகளுக்கு உற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#mannar #மன்னார்  #பள்ளிமுனை   #கைது #arrest

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.