இந்தியா பிரதான செய்திகள்

கஞ்சன்ஜங்கா சிகரத்தில் ஏறி உயிரிழந்த 2 இந்தியர்களின் உடல்கள் மீட்பு :

கஞ்சன்ஜங்கா சிகரத்தில் ஏறி உயிரிழந்த இந்தியாவைச் சேர்ந்த 2 பேர் உடல்களை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர். இந்தியா-நேபாள நாட்டுக்கு நடுவே உள்ள இமயமலையில் உள்ள கஞ்சன்ஜங்கா சிகரம் உலகத்திலேயே 3-வது மிகப்பெரிய சிகரமாகும். இதில் அதிகளவான மலையேறும் குழுவினர் ஏறி வருகின்ற நிலையில் சிகரத்தில் ஏறிய இந்தியாவைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்தநிலையில் அவர்களின் உடல்களை மீட்பு குழுவினர் மீட்டு காத்மாண்டுவில் உள்ள வைத்தியசாலைக்கு ஹெலிகொப்டர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. கடும் குளிர் ஏற்பட்டதாலும், உடலில் வெப்பம் குறைந்ததாலும் 2 பேரும் உயிரிழந்துள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

#Kanchenjunga #dead #கஞ்சன்ஜங்காசிகரத்தில்

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.