உலகம் பிரதான செய்திகள்

ஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ரொக்கெட் தாக்குதல்

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பலத்த பாதுகாப்பு நிறைந்த பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ரொக்கெட் தாக்குதல் நடைபெற்றுள்ளது. அமெரிக்க தூதரகத்தில் இருந்து ஒரு மைலுக்கும் குறைவான தூரத்தில் உள்ள பசுமை மண்டலம் பகுதியில் அது விழுந்துள்ள போதிலும் இதனால் யாரும் பாதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பு ஏற்கவில்லை என்ற போதிலும் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் ஆதிக்கம் மிகுந்த கிழக்கு பாக்தாத்தில் இருந்து குறித்த ரொக்கெட் வீசப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

வளைகுடா பகுதியில், போர்க்கப்பல்களையும், விமானங்களையும் அமெரிக்கா குவித்துள்ள நிலையில், இந்த ரொக்கெட் வீச்சு சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

#rocketattack #ameicanembassy #Iran #ஈராக்  #அமெரிக்கதூதரகம்  #ரொக்கெட் தாக்குதல்

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.