இலங்கை பிரதான செய்திகள்

வடக்கு ஆளுநர் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி :

இறுதிப்போர் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பிரதேசத்திற்கு இன்று  மாலை சென்ற வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இறுதிப் போரில் கொல்லப்பட்ட அப்பாவி பொது மக்களுக்காக அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளினதும் உறுப்பினர்ளுடனான ஆநுளரின் சந்திப்பு ஒன்று இன்று முல்லைத்தீவு கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

யுத்தத்திற்கு முகம்கொடுத்த மாவட்டமாக காணப்படும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மக்களுடைய உட்கட்டமைப்பு வசதிகளில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் அவற்றை மேம்படுத்துவது தொடர்பிலும் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

#வடக்குஆளுநர்  #இறுதிப்போர் #முள்ளிவாய்க்கால் #அஞ்சலி #mullivaikal

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.